Menu

ஏமன் உள்நாட்டு யுத்ததிற்கான அமைதி பேச்சுவார்தை இறுபறி.!!

ஏமன் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் கவுதி கிளச்சியாளர்களுக்கு ஆர்வம் இல்லை என ஏமன் நாட்டு அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

 

கடந்த 4 ஆண்டுகளாக ஏமனில் இடம்பெற்று வருகின்ற உள்நாட்டு போரினை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடந்த 3 நாட்களாக சுவீடனில் இடம்பெற்று வந்த பேச்சுவாத்தைகளின் பின்னரே ஏமன் நாட்டு அரசாங்கம் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளது.

 

இந்த பேச்சுவார்தை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே ஏமன் நாட்டு அரசாங்கத்தின் பிரதிநிதியான ரனா கானெம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

சமாதானப் பேச்சுவார்த்தையின் போது கவுதி கிளர்ச்சியாளர்கள் அதிகளவான ஆர்வத்தினை வெளிப்படுத்தவில்லை என்றும் ரனா கானெம் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எனினும், ஏமன் மக்களின் துயரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நாட்டில் அமைதி திரும்பும் என்றும் ரனா கானெம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

ஏமனில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி புரிந்து வந்த முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சலே, மக்கள் போராட்டம் காரணமாக கடந்த 2011-ஆம் ஆண்டு பதவி விலகியுள்ளார்.

 

எனினும், இதன்பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற மன்சூர் ஹாதியால் உறுதியான ஆட்சியைத் தர முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இதன் காரணமாக, கவுதி பழங்குடியின கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனாவை கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றினர்.

 

இதனை தொடர்ந்து நடைபெற்ற உள்ளநாட்டு யுத்தம் காரணமாக சுமார் 10 ஆயிரம் பேர் வரையில் பலியாகியுள்ளனர்.

 

இந்நிலையில் ஏமன் அரசுக்கும், கவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை ஸ்வீடனில் நடைபெற்று வருகிறன்றமையும் குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon