Menu

ஒருநாள் கிரிக்கெட்டிற்கான சிறந்த வீராங்கனையாக இந்திய வீராங்கனை தெரிவு.!!

சர்வதேச கிரிக்கெட் சபையின் இரண்டு விருதுகளை இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா கைப்பற்றியுள்ளார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா சர்வதேச கிரிக்கெட் சபையினால் வழங்கப்படுகின்ற இரண்டு விருதுகளை தட்டிச்சென்றுள்ளார்.

சர்வதேச பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் சாதித்த வீராங்கனைகளுக்கான விருதினை சர்வதேச கிரிக்கெட் சபை ஒவ்வொரு ஆண்டும் வழங்கிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2018-ம் ஆண்டில் சாதித்த வீராங்கனைகளுக்கான பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.

 

இதில் இந்தியாவின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா  இந்த ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை என்ற வருதினையும் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிற்கான சிறந்த வீராங்கனை என்ற இரண்டு விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடதத்க்கது.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon