Menu

சீனாவுக்கு படையெடுக்கும் கனேடிய அதிகாரிகள்..!

ஒட்டாவா மற்றும் பீஜிங்கிற்கு இடையிலான அரசியல் பதற்ற நிலைகளுக்கு மத்தியில், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், செனட் சபை உறுப்பினர்களும் சீனாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

 

அதற்கமைய, செனட் உறுப்பினர்களான விக்டர் ஓஹ், ஜோசப் டே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மைக்கல் கூப்பர், கெங் டான், மஜிட் ஜவ்ஹாரி, சந்திர ஆர்யா ஆகியோர் நாளை சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

 

ஹவாவி அதிகாரி கனடாவில் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மூன்று கனடியர்கள் சீனாவில் கைது செய்யப்பட்டனர்.

 

இவ்வாறான கைது சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் ரீதியான பதற்றத்தை தோற்றுவித்துள்ள நிலையில், கனடா – சீனா சட்டமன்ற சங்கத்தின் ஏற்பாட்டில் இருநாட்டு அதிகாரிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon