Menu

எதிர்வரும் எட்டாம் திகதி பாராளுமன்றத்தில் ஏற்படபோகும் மாற்றம்.!! தினேஷ்!!

சபாநாயகர் கருஜய சூரியவின் அறிவிப்பிற்கு இணங்க எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின்போது மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சி தலைவர் ஆசனத்திலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்கட்சி ஆசனத்திலும் அமரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் எதிர்கட்சி காரியாலயம் மற்றும் எதிர்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றையும் ஒப்படைக்குமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதியிருந்து எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்கட்சியாக தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

 

குறிப்பாக பொது தேர்தல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை உரிய காலப்பகுதிக்குள் நடாத்துவதற்கான அழுத்தங்களை அரசாங்கத்திற்கு வழங்கவுள்ளதாக தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon