Menu

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா.!!

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 

தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கடந்த 3ம் திகதி கேப்டவுனில் ஆரம்பமானது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி தென்னாபிக்க அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக 177 ஓட்டங்களுக்குள் அனைத்து இலக்குகளையும் இழந்தது.

 

இதனை தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 124.1 பந்து பரிமாற்றங்களின் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 431 ஓட்டங்களை எடுத்தது.

 

தென்னாபிரிக்க அணி சார்பில் டு பிளிசிஸ் 103 ஓட்டங்களையும், மார்கிராம் 78 ஓட்டங்களையும், பவுமா 75 ஓட்டங்களையும் மற்றும் டி கொக் 59 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுள்ளனர்.

 

இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 294 ஓட்டங்களுக்குள் சகல இலக்குகளையும் இழந்தது.
இதனால் தென்னாபிரிக்காவுக்கு வெற்றி இலக்காக 41 ஓட்டங்கள் நிர்ணயமானது.

 

பதிலுக்கு இரண்டாவது இனிங்சை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 9.5 பந்து பரிமாற்றகளின் நிறைவில் ஒரு இலக்கை மாத்திரம் இழந்து 43 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளனர்.

 

இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 11ம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon