Menu

கண்டனங்களுக்கு உள்ளாகிவருகின்ற கம்சாயினி மட்டக்களப்பில் புகழாரம்.!!

சிறந்த நகரம் ஒன்றை உருவாக்கவேண்டுமாயின் மட்டக்களப்பு மாநகர சபையின் திட்டங்களை பின்பற்ற வேண்டும் என ஓஸ்லோ மாநகரின் பிரதி மேயர் கம்சாயினி குணரட்னம் தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்புக்கான விஜயத்தினை இன்று காலை ஆமற்கொண்டிருந்த கம்சாயினி குணரட்னம் பல்வேறு தரப்பினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறிப்பாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர்;, மாநகரசபை உறுப்பினர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்.

 

அத்துடன் மட்டக்களப்பு மாநகரசபையில் மரக்கன்று ஒன்றினை நாட்டியதுடன் மாநகரசபையினையும் பார்வையிட்டுள்ளார்.
.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஓஸ்லோ மாநகரின் பிரதி மேயர் கம்சாயினி குணரட்னம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்பு மாநகரசபையில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மிகவும் சிறந்த முறையில் காணப்படுவதாகவும்
மேலும், இயற்கையினை பாதுகாக்கும் விடயத்தில் அதிக அவதானம் செலுத்த வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் மட்டக்களப்பு மாநகரசபையில் முன்னெடுக்கப்படுகின்ற் செயற்பாடுகள் பாராட்டத்தக்கவை எனவும் கம்சாயினி குணரட்னம் புகழாரம் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை ஓஸ்லோ மாநகரின் பிரதி மேயரான கம்சாயினி குணரட்னம் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடும் போது தெரிக்கப்பட்ட கருத்து ஒன்றிற்கு சமூக வலைத்தளங்களில் கண்டணங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon