Menu

இலங்கை என்ற ஒரு நாடு இல்லாமல் போகுமாம்.! மகிந்த எச்சரிக்கை.!!

2015ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் நாடு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

நான்கு வருடங்களிற்கு முன்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக 3 ஆபத்துக்களை நாடு எதிர்நோக்கியுள்ளதாகவும் புதிய அரசிலமைப்பு தொடர்பான நகல் வடிவமே இலங்கை எதிர்கொள்ளும் மிகப்பெரும் ஆபத்து என்றும் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

 

புதிய அரசியலமைப்பை தயாரிப்பவர்கள் அதனை நிறைவேற்றினால் இலங்கை என்பது இல்லாமல் போகும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

 

எதிர்க்கட்சித் தலைவராக இன்று வெளியிட்டுள்ள முதலவாது அறிக்கையில் மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இலங்கை மூன்று பாரிய ஆபத்துக்களை எதிர்கொண்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

 

நான்கு வருடங்களிற்கு முன்னர் அதாவது 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக நாடு பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக மஹிந்த ராஜபக்ச கோடிட்டு காட்டுக்கினார்.

 

குறிப்பாக பொருளாதாரம் எவ்வேளையிலும் கவிழக்கூடும் என்பதே முதல் ஆபத்து எனவும் கடந்த நான்கு வருடங்களில் தேசிய கடன் ஐம்பது வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

19வது அரசியலமைப்ப திருத்தத்தின் காரணமாக அரசின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கும் ஆபத்து காணப்படுவதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

 

19வது திருத்தத்தின் கீழ் நாடாளுமன்றத்தை எந்த சூழ்நிலையிலும் கலைக்கமுடியாது என தெரிவித்த மஹிந்த ராஜபக்ச வரவு செலவு திட்டத்தில் அரசு தோற்கடிக்கப்பட்டாலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தாலும் நாடாளுமன்றத்தை கலைக்கமுடியாது எனவும் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

 

புதிய அரசமைப்பிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

 

இந்த ஆபத்துக்கள் அனைத்தையும் தடுப்பதற்கான அரசியல் சக்தியாக தனது தலைமையிலான எதிர்கட்சி கூட்டணியே காணப்படுவதாக மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon