Menu

வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கு அணிலாக செயற்படுவேன்..புதிய ஆளுனர்

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு அணிலாகவேனும் செயற்படபோவதாக வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் இன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அவரது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேன் ராகவன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பானது வெறுமனே ஆளுநராக மட்டுமின்றி, வீழ்ந்திருக்கும் தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாக அமைந்துள்ளதாக சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

 

மண்ணின் மைந்தனாக தான் இல்லையென்றாலும் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில், பாலம் அமைப்பதற்கு ஒரு அணிலாகவேனும் செயற்படபோவதாக சுரேன் ராகவன் மேலும் தெரிவித்துள்ளார்.

பேச்சு சாமர்த்தியம் கொண்டவர்கள் போன்று, தான் இல்லை என தெரிவித்த சுரேன் ராகவன் மாறாக வேலை செய்யவே விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

குறிப்பாக ஊழலை ஒழிப்பதற்கு அனைத்து அரச அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் சுரேன் ராகவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

ஊழல் என்பது புற்றுநோய் போன்றது என சுட்டிக்காட்டிய சுரேன் ராகவன் அதனை ஒழிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை உரையாற்றும் போது சுரேன் ராகவன் மூன்று மொழிகளிலும் உரையாற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon