Menu

மண்டைதீவில் மனித புதைகுழி கண்டுபிடிப்பு எஸ்.சிறிதரன் தகவல்.!!

யாழ்பாணத்தில் உள்ள மனித புதை குழியினை அகழ்ந்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

மன்னார் மனித புதைகுழியைப் போன்று யாழ்ப்பாணத்திலும் மனித புதைகுழிகள் உண்டு எனவும், அவற்றை தோண்டியெடுத்து விசாரணை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

 

குறிப்பாக யாழ்ப்பாணம் மண்டைதீவில் தோமையார் தேவாலயம் அருகிலுள்ள கிணற்றிலும், செம்பாட்டுபிள்ளையார் கோயில் அருகிலுள்ள கிணற்றிலும் இராணுவத்தினரால் இளைஞர்கள் கொலைசெய்யப்பட்டு கிணறுகளில் போடப்பட்டதாகவும், அவற்றை தோண்டியெடுக்க வேண்டும் என்றும் எஸ்.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

 

நாடாளுமன்றம் இன்று (09.01.2019) பிற்பகல் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

இன்றைய அமர்வில், இரசாயன ஆயுதங்கள் சமவாய (திருத்தச்) சட்டத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது எஸ்.சிறிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

குறிப்பாக யுத்தகாலத்தில் நீர்வேலி, மண்கும்பான் மற்றும் வேலணை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 120இற்கு மேற்பட்ட இளைஞர்கள் அழைத்துவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டு கிணறுகளில் போட்டு மூடப்பட்டதாக சிறிதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 

அவற்றை சீமெந்து இட்டு இராணுவத்தினர் மூடியுள்ளதாக எஸ்.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றை தோண்டியெடுத்து, உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு, உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டுமென எஸ்.சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

 

அத்துடன் இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்ட சிறிதரன், அவ்வாறு பயன்படுத்தப்படாவிட்டால் எதற்காக சர்வதேச விசாரணைக்கு அஞ்சவேண்டும் என எஸ்.சிறிதரன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இரசாயன குண்டுகளின் தாக்கம் விவசாய நிலங்களில் இன்றும் காணப்படுவதாகவும், அதனால் பிறக்கும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதாகவும் சிறிதரன் சுட்டிக்காட்யுள்ளார்.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon