Menu

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர் தொடர்பில் சி.வி.கே.சிவஞானம் நம்பிக்கை.!!

தமிழ் மொழி பேசுபவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

 

வடக்கின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சுரேன் ராகவன் இன்று (09.01.2019) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

 

இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே சி.வி.கே.சிவஞானம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இலங்கை தேசிய இனத்தினுடைய வரலாற்றை புரிந்துக் கொண்டவரும் மற்றும் அதனை ஆராய்ச்சி செய்த ஒருவரே தற்பொது வடக்க மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

 

எனவே, வடக்கு மாகாணத்தின் உணர்வுகள், தேவைகள், அபிலாசைகள், மற்றம் அரசியல் இலக்குகள் என்பவற்றை புதிய ஆளுநர் நன்கு அறிந்துள்ளதாகவும் அதனை அடிப்படையாக கொண்டு புதிய ஆளுநர் செயற்படுவார் என சி.வி.கே.சிவஞானம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon